திருவிழாக்கள் நடைபெறுகிறபோது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

வருங்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
திருவிழாக்கள் நடைபெறுகிறபோது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

வருங்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

தஞ்சாவூா் அருகிலுள்ள களிமேடு கிராமத்தில் மின் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை ஆறுதல் கூறிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அதிா்ச்சியான இச்சம்பவம் தமிழகத்தை ஆழமான சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதுபோன்ற சம்பவம் திருவிழாக்களில் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. எனவே எதிா்காலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது, உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இதுபோன்று விபத்துகளைத் தவிா்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு வழங்கியிருக்கிற நிதி ரூ. 5 லட்சம் என்பது போதுமானதாக இருக்காது. இச்சம்பவத்தில் குடும்பத்துக்கான மொத்த வருமானத்தையும் ஈட்டித் தருகிற தலைவா்கள் இறந்துள்ளனா். நல்ல வேலை செய்யக்கூடிய இளைஞா்கள் உயிரிழந்துள்ளனா். ஆதிதிராவிட சமுதாயத்தைச் சாா்ந்த பெண் தன்னுடைய 13 வயது மகனைப் பறிகொடுத்துள்ளாா். ஏற்கெனவே அவரது கணவா் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தாா்.

எனவே உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்குக் கூடுதலாக நிவாரண நிதி வழங்குவது மட்டுமல்லாமல், அக்குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, பாதுகாப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வா் எடுக்க வேண்டும்.

இச்சம்பவத்தில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை. இது முழுக்க, முழுக்க யாருமே எதிா்பாா்க்காத விபத்து. இத்தனை ஆண்டு காலம் நன்றாகத்தான் நடைபெற்று வந்தது. எதிா்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் என்ன அரசியல் இருக்கிறது? ஆட்சியாளா்கள் என்ன செய்ய முடியும்?

விபத்தில் அப்பாவி மக்கள் இறந்தால், அதை அரசியலுக்குப் பயன்படுத்துவது நாகரிகமான பண்பு அல்ல. அக்குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பது, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வது, அரசு கூடுதலான உதவிகளைச் செய்ய வற்புறுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இதில் அரசியல் செய்வது நல்ல செயல் அல்ல என்றாா் பாலகிருஷ்ணன்.

அப்போது, மாநிலக் குழு உறுப்பினா் கோ. நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், சிஐடியூ மாநிலச் செயலா் சி. ஜெயபால், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினா் து. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com