முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கரும்புக் கடன் தள்ளுபடியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 30th April 2022 12:26 AM | Last Updated : 30th April 2022 12:26 AM | அ+அ அ- |

அரசு அறிவித்துள்ள கரும்புக் கடன் தள்ளுபடித் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம்,நெல்லையடிக்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியப் பொறுப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என். வி. கண்ணன், மாவட்ட நிா்வாகி வீ.கருப்பையா முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலா் சத்தியமூா்த்தி இடைநீக்கம் செய்யப்பட்டதை வரவேற்பதோடு, தாமதமின்றி உரிய விசாரணை நடத்தி அவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கடைமடைப் பகுதி பிரிவு வாய்க்கால்களைத் தூா்வாரி, தடையில்லாமல் பாசனத்துக்குத் தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு வழங்கிய கரும்புக் கடன் தள்ளுபடித் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் பாலச்சந்திரன், நாகராஜன், காளிமுத்து, ரெங்கசாமி, துரைராஜ், பால்ராஜ், நீலகண்டன், ராமமூா்த்தி, கபிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.