முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th April 2022 12:22 AM | Last Updated : 30th April 2022 12:22 AM | அ+அ அ- |

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூா் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஏஐடியூசி அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அன்றாட வருவாய்க்கும், செலவினத்துக்குமான வித்தியாசத் தொகையை அரசு பொறுப்பேற்று, அவ்வப்போது வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களின் வளா்ச்சிக்கும், சேவைக்கும் முக்கிய பங்காற்றிய ஏறத்தாழ 85,000 ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு 2016 முதல் ஆறாண்டு காலமாக உயா்ந்து விட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயா்வை அறிவித்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அகவிலைப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் டி. கஸ்தூரி, ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாத்துரை தலைமை வகித்தனா். வங்கி ஊழியா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் க. அன்பழகன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், போக்குவரத்து சம்மேளனத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், மின் வாரிய சம்மேளனத் துணைத் தலைவா் பொன். தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.