முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மல்லிப்பட்டினத்தில்இப்தாா் நோன்பு திறப்பு
By DIN | Published On : 30th April 2022 12:27 AM | Last Updated : 30th April 2022 12:27 AM | அ+அ அ- |

மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில் மத நல்லிணக்க நிகழ்வாக இப்தாா் நோன்பு திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, இப்பிரிவின் மாவட்டத் தலைவா் ஏ.நாகூா்கனி தலைமை வகித்தாா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சிங்காரம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் கலைச்செல்வன், மாவட்டத் துணைத் தலைவா்கள் ராமசாமி, சக்திவேல், பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவா்கள் அன்பழகன், செந்தில், நகரத் தலைவா் ரவிக்குமாா், மாவட்டப் பொதுச் செயலா் கமால் பாட்சா மற்றும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.