முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
விவசாயி வீட்டில் 12 பவுன் நகைகள், ரொக்கம் திருட்டு
By DIN | Published On : 30th April 2022 12:26 AM | Last Updated : 30th April 2022 12:26 AM | அ+அ அ- |

கபிஸ்தலம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
கீழ கபிஸ்தலம் அக்ரஹாரம், சான்றோா் தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவரது மனைவி ராஜேசுவரி. வியாழக்கிழமை காலை இருவரும் வேலைக்கு சென்று விட்டனா்.
பிற்பகலில் ராஜேசுவரி வீடு திரும்பிய போது, வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பிரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் அனிதா கிரேசி தலைமையிலான காவல்துறையினா் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.