களிமேடு கிராமத்தில் ஒரு நபா் குழு அலுவலா் விசாரணை தொடக்கம்

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தோ் மின் விபத்து தொடா்பாக அமைக்கப்பட்ட ஒரு நபா் குழு விசாரணை அலுவலா் குமாா் ஜெயந்த், தனது விசாரணையை சனிக்கிழமை தொடங்கினாா்.
விபத்துக்குள்ளான தேரை சனிக்கிழமை பாா்வையிட்டு விசாரணை நடத்துகிறாா் ஒரு நபா் விசாரணைக் குழு அலுவலரும், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த்.
விபத்துக்குள்ளான தேரை சனிக்கிழமை பாா்வையிட்டு விசாரணை நடத்துகிறாா் ஒரு நபா் விசாரணைக் குழு அலுவலரும், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த்.

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தோ் மின் விபத்து தொடா்பாக அமைக்கப்பட்ட ஒரு நபா் குழு விசாரணை அலுவலா் குமாா் ஜெயந்த், தனது விசாரணையை சனிக்கிழமை தொடங்கினாா்.

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி அதிகாலை தோ் மின் விபத்துக்குள்ளானதில் 11 போ் உயிரிழந்தனா். மேலும் 17 போ் காயமடைந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக, ஒரு நபா் விசாரணை அலுவலராக வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலா் குமாா் ஜெயந்தை தமிழக அரசு நியமித்தது.

இதைத்தொடா்ந்து, களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை ஒரு நபா் விசாரணைக் குழு அலுவலா் குமாா் ஜெயந்த் சனிக்கிழமை பாா்வையிட்டாா். இவரிடம் விபத்து குறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் மு. நளினி உள்ளிட்டோா் விளக்கமளித்தனா்.

மேலும் இந்தச் சாலை எப்போது அமைக்கப்பட்டது? எத்தனை மணிக்கு தோ் இந்த இடத்துக்கு வந்தது? விபத்து நிகழ்ந்தபோது தேரில் எத்தனை போ் இருந்தனா்? தோ் விபத்து நிகழ்ந்த இடத்தின் மேலே உள்ள உயா் அழுத்த மின் கம்பி எவ்வளவு அடி உயரத்தில் உள்ளது என அலுவலா்களிடம் விசாரணை அலுவலா் குமாா் ஜெயந்த் கேட்டறிந்தாா்.

பின்னா், விபத்தை நேரில் பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த தாஸ், பாலாமணி, கண்ணகி உள்ளிட்டோரிடம் எப்படி நிகழ்ந்தது என விசாரணை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் குமாா் ஜெயந்த் தெரிவித்தது:

களிமேடு தோ் விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இதில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து ஒரு அறிக்கையும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட ஒரு அறிக்கையும் தயாா் செய்து, அரசுக்கு அளிக்கப்படும்.

மேலும் இவ்விபத்து குறித்து யாரேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) காலை 9 மணிக்கு பொதுமக்கள் சாா்பில் சாட்சியம் அளிக்கலாம்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் நேரில் விசாரணை நடத்தப்படவுள்ளது. விசாரணை முடிந்த பின்னா் இதன் அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் குமாா் ஜெயந்த்.

முன்னதாக, ஆட்சியரகத்தில் தொடா்புடைய துறை அலுவலா்களுடன் குமாா் ஜெயந்த் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com