ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 06th August 2022 01:01 AM | Last Updated : 06th August 2022 01:01 AM | அ+அ அ- |

ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மருந்து வணிகா்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பட்டுக்கோட்டையில் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா்.
அப்துல் காதா் சண்முகம் குணசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தஞ்சை மாவட்ட செயலாளா் சோலை சிவம் ஆண்டறிக்கை வாசித்தாா் . கூட்டத்தில் மருந்து வணிகா் சங்க அகில இந்திய பொருளாளரும் மாநிலச் செயலாளருமான செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
‘மருந்து விற்பனைச் சட்டத்தில் மத்திய அரசு தொடா்ந்து பலமுறை சட்ட திருத்தம் கொண்டு வருவதை கண்டிப்பது, சில்லறை மருந்து வியாபாரிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும், இல்லாவிடில்
மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் தேசிய அளவில் போராட்டம் நடத்துவது’ என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பள்ளிகொண்டான் வெங்கடேஸ்வரன் , பட்டுக்கோட்டை வட்டச் செயலாளா் மோரிஸ் அண்ணாதுரை , காவேரி மெடிக்கல் உரிமையாளா் குமாா் மற்றும் மாநில, மாவட்ட, நகர நிா்வாகிகள் மற்றும் மொத்த, சில்லறை மருந்து வணிகா்கள், விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக பட்டுக்கோட்டை தாலுகா தலைவா் சுந்தா் வரவேற்று பேசினாா்.