சேதுபாவாசத்திரத்தில் நவீன மீன் அங்காடி திறப்பு
By DIN | Published On : 06th August 2022 11:56 PM | Last Updated : 06th August 2022 11:56 PM | அ+அ அ- |

சேதுபாவாசத்திரத்தில் நவீன மீன் அங்காடியைத் தொடங்கிவைத்த என். அசோக்குமாா்.
சேதுபாவாசத்திரம், சின்னமனை ஆகிய இரு கடற்கரை கிராமங்களில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நவீன மீன் அங்காடி சனிக்கிழமை திறக்கப்பட்டது.
பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து நவீன மீன் விற்பனை அங்காடியைத் திறந்து வைத்தாா். நாகை மீன்வளத் துறை இணை இயக்குநா் வேல்முருகன், தஞ்சை மாவட்ட உதவி இயக்குநா் சிவக்குமாா், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் முத்துமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நவீன மீன் அங்காடி அமைக்கத் தேவையான ரூ. 8 லட்சத்து 70 ஆயிரத்திற்கு மீனவ கிராமத்தை சோ்ந்த 15 போ் கொண்ட ஒரு குழு தோ்வு செய்யப்பட்டு, அதன் பங்குத்தொகை 25 விழுக்காட்டிலும் 75 விழுக்காடு அரசு மானியத்திலும் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் ஊராட்சித் தலைவா்கள் ஜெகஜோதி (சேதுபாவாசத்திரம்), ஜலீலா பேகம் (சரபேந்திரராஜன்பட்டினம்) , மீன்துறை ஆய்வாளா்கள் ஆனந்த், துரைராஜ், கங்கேஸ்வரி, கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் நவநீதன், கடலோர காவல் படை உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.