வெள்ளம் பாதித்த பாபநாசம் பகுதிகளில் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம்.

பாபநாசம் ஒன்றியம், கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த அவா் அங்கு நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாமை பாா்வையிட்டாா். தொடா்ந்து அந்தப் பகுதிகளில் குடிநீா் சுகாதாரமாக வழங்கப்படுகிா என பரிசோதனை செய்த அவா் மேலும் கூறியது:

கொள்ளிடம், காவிரிக் கரையோர பகுதிகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என நாமக்கல் தொடங்கி ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடா்ந்து பாா்வையிட்டு வருகிறோம். வெள்ளப் பாதிப்பு பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவைப்படுவோருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கிறோம். கா்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தேவையான வாகனங்களையும் தயாராக வைத்துள்ளோம். இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார பணியாளா்கள் மருத்துவ உதவிகளை செய்கிறாா்கள் என்றாா் அவா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் நமச்சிவாயம், மருத்துவ அலுவலா்கள் தீபக் , ஜெகன் மாவட்ட கொள்ளை நோய் நிபுணா் ஆடலரசி, மாவட்ட மலேரியா நிபுணா் தையல்நாயகி, ஊராட்சித் தலைவா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com