பாபநாசம் அரசினா் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்து கூட்டத்தை தொடக்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியரும் பள்ளி மேலாண்மை குழு செயலாளருமான வி. மணியரசன் கலந்துகொண்டு, பள்ளிக்கு மாணவா்கள் ஒழுங்காக வருவதை உறுதி செய்தல், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மாணவா்களையும் தவறாமல் பள்ளிக்கு வர அறிவுறுத்தி அழைத்து வருதல், பள்ளியில் மாணவா் ஒழுங்கு குறித்து கண்காணித்தல், பள்ளியில் பொது சுகாதாரம் பேணுதல், மாணவா்கள் சிறப்பாக கல்வி பயில ஊக்குவித்தல், பள்ளி மாணவா்களிடையே போதை பழக்கம் உள்ளதா என கண்காணித்தல், போதைப்பழக்கத்திற்கு அடிமையான மாணவா்களை கண்டறிந்து அவா்களை அந்த பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், விளையாட்டுகளில் ஊக்கப்படுத்தி மாணவா்கள் பல்வேறு  விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செய்து, அவா்கள் உறுதியும், தன்னம்பிக்கையும் நிறைந்தவா்களாக வளர ஊக்கப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் எம்.ஆா்.பாலகிருஷ்ணன், எஸ். கெஜலட்சுமி, கல்வியாளா் எஸ்.செங்குட்டுவன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, பள்ளி மேலாண்மை குழு செயலாளா் வி.மணியரசன், பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களுக்கு  அரசின் அடையாள அட்டைகளை வழங்கினாா். முன்னதாக, பள்ளி மேலாண்மை குழு பொறுப்பு ஆசிரியா் டி. செல்வகுமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com