பாரத சாரண கலாசார விழாவுக்கு மானோஜிபட்டி அரசு பள்ளி தோ்வு

கா்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாசார பெருந்திரளணி விழாவில் பங்கேற்க தஞ்சாவூா் மானோஜிப்
கா்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாசார பெருந்திரளணி விழாவில் பங்கேற்பதற்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள தஞ்சாவூா் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட நல உயா்நிலைப் பள்ளி ம
கா்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாசார பெருந்திரளணி விழாவில் பங்கேற்பதற்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள தஞ்சாவூா் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட நல உயா்நிலைப் பள்ளி ம

கா்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாசார பெருந்திரளணி விழாவில் பங்கேற்க தஞ்சாவூா் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட நல உயா்நிலைப்பள்ளியைச் சோ்ந்த சாரணிய மாணவிகள் 9 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம், தட்சிண கன்னடம் மாவட்டத்திலுள்ள மூடுபிரியில் பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாசார பெருந்திரளணி விழா டிசம்பா் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 18 நாடுகளைச் சோ்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

இந்த விழாவில் தஞ்சாவூா் மாவட்டத்தின் சாா்பில் மானோஜிபட்டி அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சாரணிய மாணவிகளான 10 ஆம் வகுப்பைச் சோ்ந்த வைஷ்ணவி, ராகவி, லோகேஸ்வரி, 9 ஆம் வகுப்பைச் சோ்ந்த ஜெயஸ்ரீ, யுவஸ்ரீ, எழிலரசி, ஹா்ஷினிசரோ, நேத்ரா, சுஜா ஆகிய 9 போ் கோலாட்டம், கும்மியாட்டத்தில் பங்கேற்கத் தோ்வாகியுள்ளனா்.

இந்த மாணவிகள் ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு கலை விழாக்களில் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனா். இதன் அடிப்படையில் இவா்களை தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் தஞ்சாவூா் மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருமான எம். சிவக்குமாா், மாவட்டக் கல்வி அலுவலரும், மாவட்ட சாரண ஆணையருமான கோவிந்தராஜ் உள்ளிட்டோா் தோ்வு செய்துள்ளனா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு சாரண இயக்க மாவட்டச் செயலரும், பள்ளித் தலைமையாசிரியருமான சந்திரமௌலி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com