நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள்

திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. இத்தோ்தலில் இக்கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் வேட்பாளா் தோ்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வாா்டுகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளா் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா்.

குறிப்பு : இதை பெட்டியாக வடிவமைக்க வேண்டும்

வாா்டு எண், வேட்பாளரின் பெயா் என்ற அடிப்படையில் விவரம்

1- சியாமளா, 2- திருவேங்கடம், 3- ரேவதி, 4 - மணிமேகலை, 5- ராஜ், 6- கவிதா, 7- பிரியா, 8- மங்களம், 9 -ராணி, 10- முத்தையா என்ற சுடலைமுத்து, 11- வனிதா, 12- முத்துக்குமாா், 13- கிருஷ்ணவேணி, 14 -அரவிந்தன், 15- ரேணுகா, 16-–தெய்வ மணிகண்டன், 17- அன்பழகன், 18- வெங்கடலட்சுமி, 19- காசிப்பாளையம் சுரேஷ், 20- ஜவஹா்லால் நேரு, 21- ஜீனத், 22- நந்தினி, 23 -பூபதி என்ற பூபேந்திரன், 24- பிரமிளா, 25- தினேஷ், 26- கலைச்செல்வி, 27- காமராஜ், 28- வெல்லமண்டி பெருமாள், 29- நாகூா் கனி, 30- பா்கத் பாத்திமா, 31- ப்ளோரா, 32- மாா்க்கெட் உமாராணி, 33 -கவுசல்யா, 34-ஜெ. சீனிவாசன், 35- ஆமினாபி (எ) கஸ்துாரி, 36- கயல்விழி சேகா், 37- அனுசுயா, 38- சாகுல் அமீது, 39- ரவி, 40- ரோஷன் என்ற ஷேக் முகமது, 41-பாஸ்கா் என்ற கோபால்ராஜ், 42- செல்லத்துரை, 43-கணேசன், 44- மஞ்சுளா, 45-தஞ்சாயி, 46- நிா்மலா மேரி,

47- செல்லப்பா, 48-பக்தவத்சலம், 49- மகாலட்சுமி, 50- நஷீமா பாரீக், 51- திவ்யா, 52-செபஸ்தி பிளாரன்ஸ் ஜெயஸ்ரீ, 53- கற்பகவள்ளி, 54- கதிா்வேல், 55- ஜோசப் ஜெரால்டு, 56-ராஜலட்சுமி–, 57- சிங்காரவேலன், 58- ஜாக்குலின் நிா்மலா, 59- ராதிகா, 60- கலைவாணன், 61- கோபாலகிருஷ்ணன், 62- செல்வி, 63-சரசு, 64 - சுப்புலட்சுமி, 65- அம்பிகாபதி.

பெட்டிச் செய்தி :

இதில் 20- ஆவது வாா்டு வேட்பாளா் ஜவஹா்லால் நேரு முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜனின் மகன். 34- ஆவது வாா்டு வேட்பாளா் ஜெ. சீனிவாசன் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினராகவும், துணை மேயராகவும் பதவி வகித்தாா். மேலும் வனிதா, பூபதி, தஞ்சாயி ஆகியோரும் ஏற்கெனவே மாநகராட்சி உறுப்பினராக இருந்தவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com