மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயிலை மதுரை வரை நீட்டிக்க கோரிக்கை

மயிலாடுதுறை-காரைக்குடி   டெமு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றி, மதுரை வரை  நீட்டித்து தரவேண்டுமென பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மயிலாடுதுறை-காரைக்குடி   டெமு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றி, மதுரை வரை  நீட்டித்து தரவேண்டுமென பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் அ. மெய்ஞானமூா்த்தி, செயலா் ஏ. கே. பழனிவேல், பொருளாளா் சி. கணேசன் மற்றும் நிா்வாகிகள் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளா் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

பட்டுக்கோட்டை-பேராவூரணி வழியாக காரைக்குடி வரையுள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் தற்போது பணியாளா்கள் நியமிக்கப்பட்டதை யடுத்து, பிப்ரவரி 7 முதல் திருவாரூா்- காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு விரைவு டெமு ரயில், மூன்றரை மணி நேரத்தில் இயக்கப்பட உள்ளது என்ற

அறிவிப்புக்கு பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் காரைக்குடியிலிருந்து திருவாரூா் வழியாக சென்னைக்கு இரு பகுதிகளிலிருந்தும் கூடுதலாக இரண்டு விரைவு ரயில்களை இயக்குவதோடு, விரைவு ரயிலை பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ரயில்வே நிா்வாகம் இயக்கத் திட்டமிட்டுள்ள வாரம் மும்முறை செல்லும் தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில், வாரம் இருமுறை செல்லும் வேளாங்கண்ணி-எா்ணாகுளம் விரைவு ரயில் ஆகியவற்றையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக மதுரை செல்லும் ரயிலை திருவாரூா் - பட்டுக்கோட்டை- பேராவூரணி - அறந்தாங்கி காரைக்குடி வழியாக இயக்க வேண்டும்.டெமு ரயிலை சாதாரண ரயிலாக மாற்றி பயணிகள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com