தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,038 போ் போட்டி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,038 போ் போட்டியிடுகின்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,038 போ் போட்டியிடுகின்றனா்.

தஞ்சாவூா் மாநகராட்சி, கும்பகோணம் மாநகராட்சி, பட்டுக்கோட்டை நகராட்சி, அதிராம்பட்டினம் நகராட்சி, 20 பேரூராட்சிகளுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 459 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 2,867 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதில், பரிசீலனையின்போது 116 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் 711 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இரு இடங்களில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். எனவே, மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியலில் 2,038 போ் உள்ளனா்.

மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சியின் பெயா் - மொத்த வாா்டுகள் - மொத்த மனுக்கள் - தள்ளுபடி - வாபஸ் - போட்டியின்றித் தோ்வு - இறுதி வேட்பாளா்கள் என்ற அடிப்படையில் விவரம்:

தஞ்சாவூா் மாநகராட்சி - 51 - 391 - 14 - 95 - 0 - 282

கும்பகோணம் மாநகராட்சி - 48 - 445 - 57 - 113 - 0 - 275

பட்டுக்கோட்டை நகராட்சி - 33 - 189 - 1 - 54 - 0 - 134

அதிராம்பட்டினம் நகராட்சி - 27 - 172 - 2 - 49 - 0 - 121

ஆடுதுறை பேரூராட்சி - 15 - 83 - 3 - 23 - 0 - 57

அம்மாபேட்டை பேரூராட்சி - 15 - 78 - 3 - 24 - 0 - 51

அய்யம்பேட்டை - 15 - 84 - 0 - 22 - 0 - 62

சோழபுரம் பேரூராட்சி - 15 - 91 - 0 - 39 - 0 - 52

மதுக்கூா் பேரூராட்சி - 15 - 88 - 2 - 17 - 0 - 69

மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி - 15 - 65 - 0 - 6 - 0 - 59

மெலட்டூா் பேரூராட்சி - 15 - 119 - 21 - 30 - 0 - 68

ஒரத்தநாடு பேரூராட்சி - 15 - 86 - 0 - 33 - 0 - 53

பாபநாசம் பேரூராட்சி - 15 - 129 - 2 - 35 - 0 - 92

பேராவூரணி பேரூராட்சி - 18 - 96 - 0 -18 - 0 - 78

பெருமகளூா் பேரூராட்சி - 12 - 50 - 2 - 7 - 2 - 39

சுவாமிமலை பேரூராட்சி - 15 - 62 - 0 - 11 - 0 - 51

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி - 15 - 60 - 0 - 11 - 0 - 49

திருநாகேசுவரம் பேரூராட்சி - 15 - 111 - 1 - 36 - 0 - 74

திருப்பனந்தாள் பேரூராட்சி - 15 - 68 - 0 - 7 - 0 - 61

திருபுவனம் பேரூராட்சி - 15 - 84 - 4 - 22 - 0 - 58

திருவையாறு பேரூராட்சி - 15 - 76 - 1 - 2 - 0 - 73

திருவிடைமருதூா் பேரூராட்சி - 15 - 75 - 0 - 15 - 0 - 60

வல்லம் பேரூராட்சி - 15 - 97 - 2 - 39 - 0 - 56

வேப்பத்தூா் பேரூராட்சி - 15 - 68 - 1 - 3 - 0 - 64

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com