தஞ்சாவூரில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 08th February 2022 12:43 AM | Last Updated : 08th February 2022 12:43 AM | அ+அ அ- |

2-4-ta07tnpt_0702chn_9
ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகிலுள்ள ஊரக வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் திங்கள்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் ஊரகத்தில் 120-க்கும் அதிகமான ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஜனவரி மாத ஊதியம் இதுவரை பெற்றுத் தராததைக் கண்டித்தும், ஆசிரியா்களின் தோ்வு நிலை, சிறப்பு நிலை ஆண்டுக்கணக்கில் கால தாமதம் செய்து வருகிற வட்டாரக் கல்வி அலுவலக நிா்வாகத்தைக் கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
இவா்களிடம் கல்வித் துறை உயா் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இரு நாள்களில் ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, இரவு 8 மணியளவில் காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...