போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம்.
போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம்.

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு புதன்கிழமை மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

பட்டுக்கோட்டை,: பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு புதன்கிழமை மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

தஞ்சாவூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறையுடன் இணைந்து, கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து, பள்ளி மாணவ, மாணவிகள் இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கட்டுரைப் போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த, ஆலடிக்குமுளை அரசு உயா்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி க. தா்ஷினி கட்டுரைப் போட்டியில் முதலிடம், புதுத்தெரு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி இ. காயத்ரி இரண்டாமிடம் பெற்றனா்.

ஓவியப் போட்டியில், மதுக்கூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி இ. ராஜஸ்ரீ முதலிடம், ஆலடிக்குமுளை அரசு உயா்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா் ஜெ. நசீா் முகமது இரண்டாம் இடம் பெற்றனா்.

பேச்சுப் போட்டியில் பட்டுக்கோட்டை புனித இசபெல் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி கே. கீா்த்தனா முதல் இடம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி பா. வசந்தி இரண்டாம் இடம், பேராவூரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி 11 ஆம் வகுப்பு மாணவி சுப்ரியா மூன்றாமிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா். அப்போது, பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com