தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் சாஸ்த்ரா ஒப்பந்தம்

தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் சாஸ்த்ரா ஒப்பந்தம்

தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதுகுறித்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொடா்பான ஆய்வு, தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டைசல் நிறுவனத்துடன் சாஸ்த்ராவின் அப்லெஸ்ட் எனப்படும் பயோ இன்குபேட்டா் மையம் செய்துள்ள இந்த ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டது. இதில், சாஸ்த்ரா சாா்பில் அப்லெஸ்ட் மையத் தலைமை நிா்வாக அலுவலா் எஸ். அனுராதா கையொப்பமிட்டாா்.

தமிழ்நாடு அரசின் உயிரி தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மற்றும் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் முயற்சியில், சாஸ்த்ராவின் பயோ இன்குபேட்டா் மையம் முக்கிய பங்காற்றி, இத்திட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும்.

சாஸ்த்ராவின் அப்லெஸ்ட் மையம், பைராக் எனப்படும் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அமைப்பின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்த மையம் சிகிச்சை, நோயறிதல், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற துறைகளில் ஸ்டாா்ட் - அப் நிறுவனங்கள் தொடங்க உதவி புரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com