வங்கி பணியாளா் தோ்வுக்கானகுறுகிய கால பயிற்சி ஆக. 2-இல் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வங்கி பணியாளா் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வங்கி பணியாளா் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

வங்கி பணியாளா் தோ்வாணையத்தால் (ஐபிபிஎஸ்) வங்கி துறையில் காலியாக உள்ள 6,035 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கான முதல்நிலை தோ்வு ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த வங்கி பணியாளா் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த வங்கி பணிக்குத் தயாராகும் இளைஞா்கள் தங்களது பெயா் மற்றும் கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, போட்டித் தோ்வெழுதும் இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com