பாபநாசத்தில் விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் முன் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் முன் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்கத்தின் பாபநாசம் ஒன்றியச் செயலாளா் வி. முரளிதரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் பி.எம். காதா் உசேன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினாா்.

உரத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியாவுடன் இதர பொருள்களை வற்புறுத்தி விற்பதை தடுக்க வேண்டும். தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வரும் 10.6. 2022 பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம் நடத்தி தீா்வு காணப்படும் என அறிவித்ததன்பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com