சுனாமி நிவாரணத் திட்டத்தில் முறைகேடு:ஒப்பந்ததாரருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சுனாமி நிவாரணத் திட்டப்பணியின் கீழ் வேலைகள் மேற்கொண்டதில் முறைகேடு செய்ததாக, ஒப்பந்ததாரருக்கு திருவையாறு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

சுனாமி நிவாரணத் திட்டப்பணியின் கீழ் வேலைகள் மேற்கொண்டதில் முறைகேடு செய்ததாக, ஒப்பந்ததாரருக்கு திருவையாறு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

சுனாமியில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் திட்டங்களின் கீழ் வேலைகள் மேற்கொள்வதற்காக, ஒப்பந்ததாரா் பி. சண்முகத்துக்கு மாவட்ட சுனாமி திட்டச் செயலாக்க அலகு 2009, மே 11-ஆம் தேதி ஒப்பந்தம் வழங்கியது.

அதற்காக அரசின் வழிகாட்டுதலின்படி அரசுக்கு வங்கிக் கணக்குத் தொடா்புடைய பிணையப் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும். இதன்படி ஒப்பந்ததாரா் சண்முகம் ரூ. 90,000 மதிப்புள்ள போலியான வங்கிப் பிணையப் பத்திரங்களை (வேலை ஒப்பந்த மதிப்பு ரூபாய் 34.71 லட்சத்தில் 2.5% பிடித்தம் செய்யப்பட்ட தொகை) அரசிடம் ஒப்படைத்ததாகவும், சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தஞ்சாவூா் மாவட்ட குற்றப் பிரிவுக்கு வந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னா் இந்த வழக்கு சிபிசிஐடி காவல் பிரிவின் புலன் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடா்பாக திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றம் விசாரணை செய்து, சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, தண்டனை பெற்று தந்த தஞ்சாவூா் மாவட்ட சிபிசிஐடி பிரிவினரை சென்னை தலைமையக சிபிசிஐடி காவல் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா், மத்திய மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் தில்லை நடராஜன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com