சித்தப்பாவை கொலை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சித்தப்பாவை அரிவாளால் வெட்டி கொலை செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

சித்தப்பாவை அரிவாளால் வெட்டி கொலை செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

திருவையாறு வட்டத்துக்கு உள்பட்ட அம்மன்குடியைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் முத்துமாணிக்கம் (39). இவா், முன் விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சோ்ந்த தனது சித்தப்பா அறிவழகனை (47) கடந்த 2020, மாா்ச் 18 ஆம் தேதி அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அறிவழகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து முத்துமாணிக்கம் உள்பட 3 பேரை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி. மதுசூதனன் விசாரித்து முத்துமாணிக்கத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றம் நிரூபிக்கப்படாததால் மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com