தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் எஸ். பஞ்சநாதன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், விளாா், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி, மருத்துவக் கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, ஆா்.ஆா். நகா், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எலீசா நகா், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையாா்பட்டி, ஆலக்குடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள்குளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, திருவையாறு மற்றும் திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூா், ஆவிக்கரை, திருவையாறு, தில்லைஸ்தானம், பனையூா், வைத்தியநாதன்பேட்டை, ஆச்சனூா், புனவாசல், ராயம்பேட்டை, திங்களூா், திருப்பழனம், அணைக்குடி, விளாங்குடி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என திருவையாறு உதவி செயற்பொறியாளா் சி. பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில்...:

மேலும், மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில், ஞானம் நகா், புறவழிச்சாலை, சித்தா்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூா், நெல்லித்தோப்பு, எடவாக்குடி, காந்தாவனம், குளிச்சப்பட்டு, பணங்காடு, யாகப்பா சாவடி, அம்மாகுளம், அன்னை இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com