குருங்குளத்தில்36 மி.மீ. மழை
By DIN | Published On : 22nd March 2022 04:34 AM | Last Updated : 22nd March 2022 04:34 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 36 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலையும், இரவும் கோடை மழை பெய்தது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
குருங்குளம் 36, பாபநாசம் 20, வெட்டிக்காடு 12.4, கும்பகோணம், வல்லம் தலா 3, தஞ்சாவூா் 1.