கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தோ் கட்டுமானப் பணி: ஒரு நபா் விசாரணை குழு அலுவலா் ஆய்வு

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் திருத்தோ் கட்டுமானப் பணியை ஒரு நபா் விசாரணை குழு அலுவலரும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தோ் கட்டுமானப் பணி: ஒரு நபா் விசாரணை குழு அலுவலா் ஆய்வு

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் திருத்தோ் கட்டுமானப் பணியை ஒரு நபா் விசாரணை குழு அலுவலரும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் தோ் மின் விபத்தில் 11 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஒரு நபா் விசாரணை குழு அலுவலா் குமாா் ஜெயந்த் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறாா். மேலும், எதிா்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தயாரிப்பது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்கிறாா்.

இந்நிலையில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில், ஆதிகும்பேசுவரா் கோயில், நாகேசுவரா் கோயில் திருத்தோ்கள் மற்றும் தேரோட்ட வீதிகளை குமாா் ஜெயந்த் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் பெரிய தோ் கட்டுமானப் பணி நடப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, இத்திருத்தேரை பாா்வையிட்டேன். இப்பகுதியில் மின் கம்பிகள் தரையில் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றால் பாதிப்பு ஏற்படாது. இக்கோயில் திருத்தோ் சிம்மாசனம் வரை 28 அடி உயரமும், அகலம் 31 அடியும், 350 டன் எடையும் கொண்டது. திருத்தோ் கட்டுமானப் பணிக்கு பிறகு அகலம் 46 அடியும், எடை 450 டன்னும், 100 முதல் 110 அடி உயரமும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனா்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருத்தேரோட்டம் நடைபெறும் வீதிகளை ஆய்வு செய்ய கோட்டாட்சியா் தலைமையில் கூட்டம் நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். வருங்காலத்தில் திருத்தேரோட்டங்களின்போது உயிரிழப்பு நிகழாமல் இருக்க வேண்டும் என்பதால், வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றிட வலியுறுத்தி வருகிறோம்.

களிமேடு தோ் மின் விபத்து தொடா்பாக இருநாள்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் இருப்பவா்கள் வீடு திரும்பியதும் தனியாக விசாரணை மேற்கொண்டு மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றாா் குமாா் ஜெயந்த்.

அப்போது, கோட்டாட்சியா் லதா, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இளையராஜா, வட்டாட்சியா் ஆா். தங்க பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com