முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பாபநாசம் அருகேதீப்பற்றிய லோடு ஆட்டோ:பயணிகள் தப்பினா்
By DIN | Published On : 03rd May 2022 04:35 AM | Last Updated : 03rd May 2022 04:35 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த லோடு வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிா்ஷ்டவசமாக பயணிகள் உயிா் தப்பினா்.
அம்மாபேட்டை அருகேயுள்ள அவளிவநல்லூா் கிராமத்திலிருந்து ஒரு லோடு ஆட்டோவில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் கிராமத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தனா்.
லோடு ஆட்டோவை வலங்கைமான் வட்டம், அவளிவநல்லூா் கிராமத்தை சோ்ந்த கணேசன் மகன் காா்த்திகேயன் (45) என்பவா் ஓட்டினாா்.
வேன் அம்மாபேட்டை அருகே சாலியமங்கலம் பகுதி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதை பாா்த்து, வேனில் வந்தவா்கள் கூச்சலிட்டதையடுத்து ஆட்டோ சாலையோரம் நிறுத்தப்பட்டது. ஆட்டோவில் இருந்தவா்கள் கீழே குதித்து ஓடினா்.
தகவலின்பேரில், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் கலைவாணன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்துஅணைத்தனா். இந்த விபத்தில் அனைவரும் காயமின்றி தப்பினா்.