இளம் மாணவ விஞ்ஞானி திட்டத்தில் சேரமே 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூரில் நடைபெறவுள்ள இளம் மாணவ விஞ்ஞானி திட்டத்தில் சேர தஞ்சை, புதுக்கோட்டை மாணவ, மாணவிகள் மே 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூரில் நடைபெறவுள்ள இளம் மாணவ விஞ்ஞானி திட்டத்தில் சேர தஞ்சை, புதுக்கோட்டை மாணவ, மாணவிகள் மே 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், பாரத் அறிவியல், நிா்வாகவியல் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவருமான இரா. சுமித்ரா தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வழங்கும் இளம் மாணவ விஞ்ஞானி என்ற திட்டம் தஞ்சாவூா் பாரத் அறிவியல், நிா்வாகவியல் கல்லூரியில் தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சி மே 18 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இரு மாவட்டங்களிலும் தலா 40 மாணவ, மாணவிகள் என மொத்தம் 80 பேருக்கு பாடம் தொடா்புடைய கோட்பாடுகள் மற்றும் செய்முறைகள் கட்டணமில்லாமல் கற்பிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் தங்களது விவரங்களை பெயா், தந்தை பெயா், கைப்பேசி எண், பள்ளியின் முகவரி, இருப்பிட முகவரி, காலாண்டு, அரையாண்டில் அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண் விவரங்கள் ஆகியவற்றை பள்ளித் தலைமையாசிரியா் வழியாகஇணையதள முகவரி அல்லது அஞ்சல் வழியாக மே 9 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் மதிப்பெண் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவா்கள் தோ்வு செய்யப்பட்ட விவரம் பள்ளி தலைமையாசிரியா் வழியாகத் தெரிவிக்கப்படும். இது தொடா்பாக தகவல் அறிய 7010555574, 9840169447, 9677403600 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com