முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
நடைப்பயணம் மேற்கொள்ளும் மதுரை தம்பதி கும்பகோணத்துக்கு வருகை
By DIN | Published On : 08th May 2022 11:48 PM | Last Updated : 08th May 2022 11:48 PM | அ+அ அ- |

கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கும் மதுரை தம்பதியினா்.
உலக அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொள்ளும் மதுரை தம்பதியினா், கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
உலக அமைதி மற்றும் போா் இல்லா உலகமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளா் ம. கருப்பையா, இவரது மனைவியான இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பு மகளிா் பிரிவுச் செயலா் ச. சித்ரா ஆகியோா், கோவை மாவட்டம், பேரூா் ஆதினத்திலிருந்து ஏப்ரல் 4 -ஆம் தேதி நடைப்பயணத்தைத் தொடங்கினா்.
கரூா், திருச்சி வழியாக கும்பகோணத்துக்கு வந்த இத்தம்பதியினா், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கினா். இவா்கள் கும்பகோணத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டு வடலூா், கடலூா் வழியாக புதுச்சேரி ஆரோவில்லுக்கு மே 21- ஆம் தேதி சென்றடைய உள்ளனா்.