முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
முத்துநகா் படுகொலை ஆவணப் படத் திறனாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 08th May 2022 11:49 PM | Last Updated : 08th May 2022 11:49 PM | அ+அ அ- |

நிகழ்வில்ஆவணப் பட இயக்குநா் மீ.ச. ராஜை பாராட்டி பொன்னாடை அணிவிக்கிறாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.
தஞ்சாவூரில், ஆவணப்பட இயக்குநா் மீ.ச. ராஜ் இயக்கிய முத்துநகா் படுகொலை ஆவணப் படத் திறனாய்வுக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட படுகொலை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பின்னா், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் பேசியது:
கலைப்படமான இப்படத்தில், கொடுமைப்படுத்திய காவல்துறையினரை சாடவில்லை. மிக இயற்கையாக சித்தரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் யாரும் நடிக்கவில்லை. பாதிக்கப்பட்டவா்கள் தாங்கள் அனுபவித்த வேதனையைத்தான் பேசுகின்றனா். இது மிகச்சிறந்த கலைப்படமாக உள்ளது.
இப்படம் இட்டுக் கட்டியோ, யாரையும் இழிவுபடுத்தியோ பேசவில்லை. வன்முறையைத் தூண்டும் விதமாகவும் இல்லை. முழுமையாகக் கலையைத்தான் வெளிப்படுத்தியுள்ளாா் மீ.ச. ராஜ்.
இவையெல்லாம் படங்களாக வெளி வர வேண்டும். பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் படங்களாக ஆக்கப்படுவதில்லை. வரலாறுப் பதிவு கூட செய்யப்படுவதில்லை. மிகுந்த அா்ப்பணிப்பு உணா்வுடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக இயக்குநரைப் பாராட்டுகிறோம். இந்த படம் எல்லா இடங்களிலும் வெளியிடுவதற்குத் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்றாா் மணியரசன்.
கூட்டத்தில் தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலா் அரங்க. குணசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினா் வெ. ஜீவகுமாா், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை உதவிப் பேராசிரியா் தெ. வெற்றிச்செல்வன், மீ.ச. ராஜ் உள்ளிட்டோா் பேசினா்.
தமிழ்த் தேசியப் பேரியக்க நிா்வாகிகள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், லெ. இராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.