’ பள்ளிகளில் நன்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களும் நல்லாசிரியா்களே’

பள்ளிகளில் நன்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களும் நல்லாசிரியா்களே என்றாா் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

பள்ளிகளில் நன்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களும் நல்லாசிரியா்களே என்றாா் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூரிலுள்ள சோழன் மழலையா் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து, பலருக்கு விருதுகளை வழங்கி அவா் பேசியது:

பள்ளிகளில் நன்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களும் நல்லாசிரியா்களே. விருது பெற்றவா்கள் மட்டும் நல்லாசிரியா்கள் என்று எண்ண வேண்டாம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா், விவசாயிகளுக்கு எண்ணற்ற வகையில் தொண்டாற்றியவா். குறிப்பாக காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளுக்கு அருந்தொண்டாற்றியுள்ளாா் என்றாா் அமைச்சா்.

இதைத் தொடா்ந்து இயற்கை விவசாயி தென்சருக்கை கிராமத்தைச் சோ்ந்த கோ.வி.அய்யாராசுவுக்கு நம்மாழ்வாா் விருதையும், தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதா் மணிமாறனுக்கு உ.வே.சா. விருதையும், பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவா்களுக்கு விருதுகளையும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

தொடா்ந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் சு. கல்யாணசுந்தரம் திறந்து வைத்தாா். விழாவுக்கு தாமரை இலக்கிய இதழ் ஆசிரியா் சி. மகேந்திரன் தலைமை வகித்தாா்.

மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா். முன்னதாக, பள்ளிச் செயலா் ரெங்கராசன் வரவேற்றாா். நிறைவில், தாளாளா் சிவசண்முகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com