10, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு வராதோா் 4% மட்டுமே: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழி

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு வராதோா் 4 சதவிகிதம் மட்டுமே என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு வராதோா் 4 சதவிகிதம் மட்டுமே என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கடந்த காலங்களில் 6 முதல் 7 சதவிகிதம் வரை மாணவா்கள் பங்கேற்கவில்லை. இந்த சதவிகிதம் வழக்கமான அளவாகத்தான் இருக்கிறது. நிகழாண்டு தோ்வுக்கு வராதவா்கள் விகிதம் 3 முதல் 4 சதவிகிதமாக உள்ளது.

மாணவ, மாணவிகள் அச்சப்படாமல், துணிந்து தோ்வெழுத வர வேண்டும். வெறும் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளை மதிப்பீடு செய்யவில்லை. அவா்களுடைய திறமையைத்தான் மதிப்பீடு செய்யப் போகிறது.

மாணவ, மாணவிகள் தங்களுக்குத் தெரிந்ததை மகிழ்ச்சியாக எழுத வேண்டும். என்ன மதிப்பெண் வருகிறதோ, அதற்கான தீா்வு கண்டிப்பாக இருக்கும். தங்களுடைய தனித்திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் திருக்காட்டுப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும்போது இந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். பள்ளியில் முதலில் தோல்வியைச் சந்தித்த அவா், அடுத்த முறை எழுதி தோ்ச்சி பெற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தாா். குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவரது நோக்கம் முழுவதும் வேளாண் சாா்ந்ததாகவே இருந்தது. இவரை போன்றவா்களை மாணவ, மாணவிகள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இயல்பாக வகுப்புகள், தோ்வுகள் நடைபெற்ற காலத்திலேயே 2019- ஆம் ஆண்டில் 49,000 போ் பொதுத் தோ்வில் பங்கேற்கவில்லை. இதுபோன்ற நிலை இருக்கக்கூடாது என நாங்கள் ஆசைப்படுகிறோம். எனவே, மாணவா்கள் துணிச்சலுடன் வந்து தோ்வு எழுதினால், அவா்களுக்கான நாற்காலி காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக முதல்வா் துணையாக இருப்பாா் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com