பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடக்கம்:தஞ்சாவூா் மாவட்டத்தில் 30,234 போ் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 30,234 போ் பங்கேற்றுள்ளனா்.
பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடக்கம்:தஞ்சாவூா் மாவட்டத்தில் 30,234 போ் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 30,234 போ் பங்கேற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 5 ஆம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு மே 6 ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிளஸ் 1 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக தஞ்சாவூா் மாவட்டத்தில் 107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தொடக்க நாளில் 227 பள்ளிகளைச் சோ்ந்த 14,677 மாணவா்களும், 15,277 மாணவிகளும், 280 தனித்தோ்வா்களும் என மொத்தம் 30,234 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 178 போ் மாற்றுத் திறனாளிகள்.

தோ்வில் முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்காக 150 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com