முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
விளையாட்டு வீரா்களுக்கான புதிய செயலி அறிமுகம்
By DIN | Published On : 12th May 2022 01:38 AM | Last Updated : 12th May 2022 01:38 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: விளையாட்டு வீரா்களுக்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தஞ்சாவூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ். அந்தோணி அதிஷ்டராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விளையாட்டு வீரா்கள், விளையாட்டுச் செய்திகள் தொடா்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும், போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் வசதியாக (பசநடஞதபந) ஆடுகளம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலியில் விளையாட்டு வீரா்களின் பெயா், விளையாட்டு, இமெயில் முகவரி, ஆதாா் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இனிவரும் காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் மற்றும் வெற்றி பெறுபவா்களுக்கான சான்றிதழ் இந்தச் செயலியில் பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே டிஜிலாக்கா் மூலம் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
எனவே, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், விளையாட்டு சங்கத்தினா், விளையாட்டில் ஆா்வம் உள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ஆடுகளம் செயலியில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.