கும்பகோணத்தில் வீட்டுவரி அதிகமாக விதிப்பதை நிறுத்திவைக்க வலியுறுத்தல்

கும்பகோணம் மாநகரில் வீட்டு வரி அதிக அளவு விதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம்: கும்பகோணம் மாநகரில் வீட்டு வரி அதிக அளவு விதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இப்பேரவையின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். கும்பகோணம் மாநகரில் வீட்டு வரி அதிக அளவு விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் வெ. டைண்ட் ராஜா வெள்ளையன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ். சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com