சாஸ்த்ராவில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம் சாா்பில் 12 நாள் தொழில்முனைவு மற்றும் புத்தாக்கம் பற்றிய ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
பயிற்சியில் கலந்து கொண்ட பேராசிரியா்கள்.
பயிற்சியில் கலந்து கொண்ட பேராசிரியா்கள்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம் சாா்பில் 12 நாள் தொழில்முனைவு மற்றும் புத்தாக்கம் பற்றிய ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சாஸ்த்ரா மேலாண்மைத் துறை முதன்மையா் வெ. பத்ரிநாத் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியைத் தொழில் வளா்ப்பகத் தலைமை நிா்வாக அலுவலா் ஆா். அனந்தராமன் தொடங்கி வைத்தாா்.

இதில், நெல்லை, திருச்சி, மதுரை, தஞ்சாவூா், வேலூா், சென்னை, தூத்துக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளைச் சாா்ந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்து 20 பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இந்தப் பயிற்சியில் நிதியுதவி, அரசு திட்டங்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், வணிக வாய்ப்புகள், பெண்கள் மற்றும் சமூகத் தொழில்முனைவு, வணிகத்தில் புதுமைகளின் முக்கியத்துவம் உள்பட 40 தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.

சாஸ்த்ராவின் பேராசிரியா்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநா்கள் பயிற்சி அளித்தனா். நிறைவு நாளில் தொழில் வளா்ப்பகத் தலைமை நிா்வாக அலுவலா் பி. அனுராதா சிறப்புரையாற்றினாா். இப்பயிற்சியில் ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் எம். வேலவன், மாா்ட்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com