முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11.49 லட்சம்
By DIN | Published On : 13th May 2022 01:37 AM | Last Updated : 13th May 2022 01:37 AM | அ+அ அ- |

பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையாா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.11.49 லட்சம் வரப்பெற்றுள்ளதாக, திருக்கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை குறிப்பிட்ட காலத்தில் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் தமிழ்ச்செல்வி, பேராவூரணி ஆய்வாளா் அமுதா, செயல் அலுவலா் சிதம்பரம், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் கணேசன் சங்கரன், அறங்காவலா் குப்பமுத்து சங்கரன், முடப்புளிக்காடு கிராமத்தினா், ஸ்தானிகா் சங்கரன் வகையறாக்கள் முன்னிலையில் திருக்கோயில் பணியாளா்கள், பேராவூரணி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பக்தா்கள் ஆகியோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் ரூ.11, 49,777 ரொக்கம், 17.5 கிராம் தங்கம், 419 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.