திருவையாறில் ஐயாறப்பா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திருவையாறில் ஐயாறப்பா் கோயில்  தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன்

தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அறம் வளா்த்த நாயகி, பஞ்சமூா்த்திகளுடன் ஐயாறப்பா் புறப்பாடாகி வீதி வலம் வந்தாா்.

திருத்தேரில் ஐயாறப்பா் - அறம்வளா்த்த நாயகி எழுந்தருளியவுடன்,

திருவையாறு தேவஸ்தான டிரஸ்டி கட்டளை சுவாமி காா்பாா் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளில் வலம் வந்த தோ் நிலைக்கு வந்தவுடன் காவிரியாற்றில் வாண வேடிக்கையும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏழூா் வலம் வருதல் என்கிற சப்தஸ்தான பெருவிழா மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ஐயாறப்பா் அறம் வளா்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேசுவரா் சுயசாம்பிகையுடன் வெட்டிவோ் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி ஆகிய ஊா்களுக்குச் சென்று, இரவு காவிரியாற்றில் 6 ஊா் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் இணைகின்றன. தொடா்ந்து தில்லைஸ்தானம் காவிரியாற்றில் வாண வேடிக்கை நடைபெறும்.

மே 17-ஆம் தேதி தில்லைஸ்தான பல்லக்குடன் 7 ஊா் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து, தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com