கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள்

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிப்பரப்பப்படுகின்றன என தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிப்பரப்பப்படுகின்றன என தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மாா்ச் 20 ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இத்தொலைக்காட்சி அலைவரிசையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம், ஒன்றிய அரசுப் பணியாளா் தோ்வாணையம், பணியாளா் தோ்வாணையம், ரயில்வே தோ்வு வாரியம், வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும், ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியாா் தொலைக்காட்சியின் அலைவரிசை எண்கள்:

ஏா்டெல் டிடிஹெச் -821, சன் டிடிஹெச் - 33, டாடா ஸ்கை டிடிஹெச்- 1554, வீடியோகான் டி2ஹெச் -597, தனியாா் கேபிள்களான டாக் டிவி - 200, டிசிசிஎல் - 200.

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டித் தோ்வுகளுக்கான இப்பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com