முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்: தமிழ் ஈகையிருக்கு வி.கே.சசிகலா நினைவஞ்சலி

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு, முதல் முறையாக வந்த சசிகலா தமிழ் ஈகையிருக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினார்.
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்: தமிழ் ஈகையிருக்கு வி.கே.சசிகலா நினைவஞ்சலி

தஞ்சாவூர்: முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு, முதல் முறையாக வந்த சசிகலா தமிழ் ஈகையிருக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினார்.

2009 ஆண்டு மே 16, 17, 18 நாள்களில் இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலையில் 1.50 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த ஈகையினரின் தியாகத்தை போற்றும் வகையில் தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. 

13வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சசிகலா முதல்முறையாக வந்து தமிழ் ஈகையருக்கு  மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார். 

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை சந்தித்து முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தியாகிகள் வரலாறுகளை படித்து தெரிந்து கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com