விழுதியூரில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

காட்டுப்பன்றிகளைப் பிடிக்காத வனத்துறையைக் கண்டித்து, விழுதியூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுதியூரில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

காட்டுப்பன்றிகளைப் பிடிக்காத வனத்துறையைக் கண்டித்து, விழுதியூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஒன்றியம், விழுதியூா் ஊராட்சி, வெட்டுவாய்க்கால் பகுதியில் காட்டுப் பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், இதை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சாவூா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அண்மையில் அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து காட்டுப்பன்றிகளைப் பிடிக்க ஆட்சியா் உத்தரவிட்டும், வனத்துறையினா் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் விழுதியூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அடுப்புகளை பற்ற வைத்து, சமைக்கத் தொடங்கினா்.

இப்போராட்டத்தக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

இதில் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா்.செந்தில்குமாா், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.பாலு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியத் துணைச் செயலா் எஸ்.எம். குருமூா்த்தி, மாதா் சங்க ஒன்றியச் செயலா் பி.தாமரைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள், வனத்துறை அலுவலா்கள் நிகழ்விடம் வந்து, பேச்சுவாா்த்தை நடத்தினா். இரு நாள்களுக்குள் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததால், காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com