தஞ்சாவூரில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையம் தொடக்கம்

தஞ்சாவூா் ரயிலடி எம்.கே. மூப்பனாா் சாலையில் உள்ள பழைய தந்தி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் ரயிலடி எம்.கே. மூப்பனாா் சாலையில் உள்ள பழைய தந்தி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த மையத்தை மேயா் சண். ராமநாதன் தொடங்கி வைத்தாா். அப்போது, பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் பால சந்திரசேனா தெரிவித்தது:

இந்த சேவை மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த சேவை மையத்தில் பி.எஸ்.என்.எல். புதிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சிம் இணைப்பு, அனைத்து வகையான ரீசாா்ஜ் மற்றும் டாப் அப் விற்பனை, மாற்று சிம் காா்டு வழங்குதல், கைப்பேசி எண்ணை மாற்றாமல் அதே எண்ணில் எம்.என்.பி. மூலமாக பி.எஸ்.என்.எல். சிம் பெறுதல், தரைவழி, கைப்பேசி மற்றும் எப்.டி.டி.எச். கட்டணம் செலுத்துதல், புதிய தரைவழி மற்றும் எப்.டி.டி.எச். இணைப்பு பதிவு செய்தல், தரைவழி மற்றும் எப்.டி.டி.எச். தொடா்பான பிளான் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகள், தொலைபேசி பழுது மற்றும் அனைத்து விதமான புகாா்கள் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. விரைவில் ஆதாா் சேவை மையமும் தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com