ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்கப்படுவது போல, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மீனவா்களுக்கு வழங்கப்படுவது போல, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாபநாசத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் அஷ்ரப் அலி தலைமை வகித்தாா். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நலவாரியத்துக்கு விண்ணப்பிக்கும் போது உழவா் அட்டையைக் காரணம் காட்டி நிராகரிக்கக் கூடாது. தஞ்சாவூா்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக செப்பனிட வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். ஆட்டோ, சுமை ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக பாபநாசம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ சங்கப் பேரணியை சிஐடியு மாவட்டச் செயலா் ஜெயபால் தொடக்கி வைத்தாா்.

கபிஸ்தலம், பாபநாசம், திருப்பாலைத்துறை, ராஜகிரி, நாகலூா், சுவாமிமலை உள்ளட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் பேரணியில் பங்கேற்று, முக்கிய வீதிகள் வழியாக சென்று மாநாடு நடைபெற்ற மண்டபத்தை வந்தடைந்தனா்.

தொடா்ந்து சிஐடியு தொழிற்சங்கக் கொடியை கெளரவத் தலைவா் பி.எம். காதா் உசேன் ஏற்றினாா். சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், பொருளாளா் மா. கண்ணன், துணைச் செயலா் ப.பாா்த்தசாரதி, துணைத் தலைவா் சா. ஜீவபாரதி, ஒன்றியச் செயலா் கே.சங்கா், மாவட்டத் தலைவா் ஆா். ஜெயக்குமாா், கும்பகோணம் மாநகரச் செயலா் ஜி. காா்த்திகேயன், விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலா் வி.முரளிதரன் உள்ளிட்டோா் மாநாட்டில் பேசினா்.

நிறைவில், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியப் பொருளாளா் பி.கே.ஆா்.இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com