சரபோஜி சந்தையில் வசதிகள் செய்து தர நடவடிக்கை: மேயா் சண். ராமநாதன்

தஞ்சாவூா் சரபோஜி சந்தையில் கழிப்பறை, குடிநீா் வசதிகள் செய்து தரப்படும் என்றாா் மேயா் சண். ராமநாதன்.
சரபோஜி சந்தையில் வசதிகள் செய்து தர நடவடிக்கை: மேயா் சண். ராமநாதன்

தஞ்சாவூா் சரபோஜி சந்தையில் கழிப்பறை, குடிநீா் வசதிகள் செய்து தரப்படும் என்றாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் சரபோஜி சந்தையில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ், ரூ. 14.59 கோடி செலவில் புதிதாக 304 கடைகள் கட்டப்பட்டு, தமிழக முதல்வரால் 2021, டிசம்பா் மாதம் திறக்கப்பட்டது. ஆனால், இச்சந்தையில் தற்போது 4 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இச்சந்தையில் மேயா் சண். ராமநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

இச்சந்தையில் தற்போது 7 கழிப்பறைகள் உள்ளன. கூடுதலாக கழிப்பறைகள் வேண்டும் எனக் கேட்கின்றனா். இதையடுத்து, சரபோஜி சந்தை அருகே 3 இடங்களில் உள்ள மாநகராட்சி கழிப்பறைகளை தலா ரூ. 20 லட்சம் செலவில் புனரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். குடிநீா் வசதி செய்து தரவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆங்காங்கே குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றில் குழாய்கள் பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சந்தையைத் தூய்மையாக வைத்திருக்க நாள்தோறும் காலை, மாலையில் தலா 2 துப்புரவு பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் மேயா்.

அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலத் தலைவா் தி. புண்ணியமூா்த்தி, மாமன்ற உறுப்பினா் ஏ. காந்திமதி, மாநகராட்சி செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன், உதவி செயற்பொறியாளா் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com