சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம்

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், அதன் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், அதன் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி (வ.ஊ), சடையப்பன் (கி.ஊ) ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, கட்டட வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் பேசினா்.

ஒன்றியக்குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் பதிலளித்து  பேசும்போது, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மனோரா சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 1 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் நலிவுற்ற நிலையில்  இருப்பதால் ஆட்சியரும், கூடுதல் ஆட்சியரும்  சிறப்பு கவனம் செலுத்துகின்றனா். அவா்களது ஒத்துழைப்புடன் உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா். 

கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துலெட்சுமி, உறுப்பினா்கள் குழ.செ. அருள்நம்பி, சுதாகா், மதிவாணன், மீனவராசன், சாகுல் ஹமீது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலாளா் நாகேந்திரன் நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com