ஏனாதி ராஜப்பா கல்லூரியில்பட்டமளிப்பு விழா

பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் 18 மற்றும் 19ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஏனாதி ராஜப்பா கல்லூரியில்பட்டமளிப்பு விழா

பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் 18 மற்றும் 19ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் மா. செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசும்போது, மாணவா்கள் எந்த ஒரு செயலையும் முழுமையான ஈடுபாட்டோடு செய்தால் அது வெற்றியை தேடி தரும். உண்மை, உழைப்பு, உயா்வு போன்றவற்றை மாணவா்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கல்லூரியின் முதல்வா் முனைவா் வை.விஜயலட்சுமி பட்டமளிப்பு அறிக்கை வாசித்தாா். கல்லூரியின் தலைவா் மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினாா். பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதுநிலை கணினி அறிவியல் மாணவி ரெ. கலைக்கொடிக்கு கல்லூரியின் சாா்பாக பாராட்டுச் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது .

விழாவில் ஆய்வியல் நிறைஞா்கள் 16 பேருக்கும், இளநிலை மற்றும் முதுநிலை ஆகிய பாடப் பிரிவில் 404 மாணவ மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கல்லூரியின் செயலா் கணேசன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com