குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு: முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை

பட்டுக்கோட்டை குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் முந்தைய ஆட்சியில் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகளுக்கே வீடு வழங்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ சி.வி. சேகா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பட்டுக்கோட்டை குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் முந்தைய ஆட்சியில் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகளுக்கே வீடு வழங்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ சி.வி. சேகா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

பட்டுக்கோட்டை, பெருமாள் கோயில், புதுரோடு பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மகாராஜசமுத்திரம் கிராமத்தில் கொண்டு வந்த திட்டத்தில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில் 336 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வாரிய ஒப்புதல் பெறப்பட்டது. இதை வட்டாட்சியா், கோட்டாட்சியா், கட்டட ஆய்வாளா் ஆகியோா் ஆய்வு செய்து வீடுகள் ஒதுக்கீடு செய்து, இக்குடியிருப்புகளுக்கு பயனாளியின் பங்களிப்பு தொகையாக ரூ. 85,000/ செலுத்த கடிதம் அனுப்பப்பட்டது.

அவா்களும் மேற்படித் தொகையை செலுத்தத் தயாராக இருந்த நிலையில் கடந்தாண்டு கரோனா பாதித்த நோயாளிகள் மேற்கண்ட குடியிருப்பு வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்ததால், வீடு ஒதுக்கீடும் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் ஆட்சி மாற்றத்தால் ஏழை, எளிய, வீடு இல்லாத மக்கள் பயன்பெறுவதைத் தடுக்கும்விதமாக மாவட்ட ஆட்சியா் சாா்பாக தற்போது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் குடியிருப்பு பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வந்துள்ளது. இதை மறு பரிசீலனை செய்து ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com