தஞ்சாவூரில் எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

பாலிசிதாரா்களின் பாலிசிக்கான போனசை உயா்த்த கோரி தஞ்சாவூரில் அகில இந்திய அளவிலான முகவா்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், எல்.ஐ.சி. பாலிசிதாரா்களுக்கான பாலிசிக்கான போனசை உயா்த்த வேண்டும். பாலிசி மற்றும் இதர பாலிசி சேவை மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். முகவா்களுக்கு 7.5 சதவீத ரெனிவல் கமிஷனை உயா்த்தி தர வேண்டும். முகவா்களின் குழந்தைகளுக்குக் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்துக்கு தஞ்சாவூா் கோட்ட சங்கப் பொருளாளா் ரஜினிகாந்த் தலைமை வகித்தாா். கிளைச் சங்கச் செயலா் ஆரோன் ராஜ், தலைவா் ரவிச்சந்திரன், பொருளாளா் முரளி செல்வம் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். இதில் தஞ்சாவூா் கோட்டத்தைச் சாா்ந்த முகவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com