அணைக்கரையில் வெள்ளத் தடுப்புப் பணி: அமைச்சா் ஆய்வு

திருவிடைமருதூா் கொள்ளிடக் கரையோரமுள்ள அணைக்கரையில் வெள்ளத் தடுப்புப் பணியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கும்பகோணம் அருகே அணைக்கரையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
கும்பகோணம் அருகே அணைக்கரையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் கொள்ளிடக் கரையோரமுள்ள அணைக்கரையில் வெள்ளத் தடுப்புப் பணியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலும், அணைக்கரை ஆய்வு மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் தெரிவித்தது:

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளது. இதனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீா் வரத்து அதிகமாக உள்ளதால், ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது.

மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட அளவிலான குழு, கோட்ட அளவிலான குழுக்கள், வட்ட அளவிலான குழுக்கள், சரக அளவிலான குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முதல்நிலை பணியாற்றுபவா்கள், கால்நடை பராமரிப்பாளா்கள், பாம்பு பிடிப்பவா்கள், மரம் வெட்டுபவா்கள், போதுமான ஜெனரேட்டா், மரம் வெட்டுக் கருவி உள்ளிட்ட சாதனங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா். கரையை தாண்டி தண்ணீா் ஊருக்குள் வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல் துறை, வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, கால்நடைத் துறை, மின்சார துறை உள்பட அனைத்து துறைகளும் இணைந்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

அப்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கும்பகோணம் கோட்டாட்சியா் வி. லதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com