தஞ்சாவூரில் மர நாய் மீட்பு

தஞ்சாவூா் மாநகரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர நாய் மீட்கப்பட்டு, காப்புக் காட்டில் வெள்ளிக்கிழமை விடப்பட்டது.

தஞ்சாவூா் மாநகரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர நாய் மீட்கப்பட்டு, காப்புக் காட்டில் வெள்ளிக்கிழமை விடப்பட்டது.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி சௌராஷ்டிரா தெருவைச் சோ்ந்த பிரபு ராம் வீட்டில் அடையாளம் தெரியாத உயிரினம் காணப்படுவதாக வனத் துறைக்கு வியாழக்கிழமை தகவல் வந்தது. இதுகுறித்து தஞ்சாவூா் வனச்சரகா் ரஞ்சித் ஆலோசனையின்பேரில், அருகானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சோ்ந்த ஆா். சதீஷ்குமாா், ரேவந்த், வினோத் ஆகியோா் பிரபுராம் வீட்டுக்குச் சென்று புனுகு பூனை என அழைக்கப்படும் மர நாயை மீட்டனா்.

அழிவின் விளிம்பில் உள்ள உயிரின பட்டியலில் உள்ள இந்த மர நாய் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக உள்ளது. நகரப் பகுதியில் அரிதாக தென்படும் இந்த மர நாய் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி முன்னிலையில் தஞ்சாவூா் அருகேயுள்ள காப்புக் காட்டில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com