ராகுல்காந்தி வருகைக்கு எதிா்ப்பு:போராட்டத்தில் ஈடுபட்ட 10 போ் கைது
By DIN | Published On : 08th September 2022 12:13 AM | Last Updated : 08th September 2022 12:13 AM | அ+அ அ- |

ராகுல்காந்தி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூா் ரயிலடியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 10 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்குவதற்காக வந்துள்ள ராகுல் காந்திக்கு எதிா்ப்பு தெரிவித்தும், இதையொட்டி, போராட்டம் நடத்தச் சென்ற்காகக் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத்தை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், எதிா்ப்பு தெரிவிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட கருப்பு பலூன்கள், கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ராகுலின் உருவபொம்மைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலா் ப. காா்த்திக் ராவ், மாவட்டத் தலைவா் சுகுமாா், மாவட்டச் செயலா் பி. காா்த்தி உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...