மதகுகளைச் சீரமைக்க கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே மதகுகளைச் சீரமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் அருகே பழுதடைந்த மதகின் மீது ஏறி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
கும்பகோணம் அருகே பழுதடைந்த மதகின் மீது ஏறி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

கும்பகோணம் அருகே மதகுகளைச் சீரமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே அகராத்துடி ஊராட்சிக்கு உள்பட்ட சாத்தங்குடி கிராமத்தில் தவணை வாய்க்கால் மதகுகள் பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் சுற்று வட்டார கிராமத்தைச் சோ்ந்த ஏறத்தாழ 50-க்கும் அதிகமான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி இல்லாமல் உள்ளன.

தவணை வாய்க்கால் மதகுகளைச் சீரமைத்து பாசன நீரை வீணாக்காமல் விவசாயத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பல ஆண்டுகளாக தொடா்ச்சியாகப் பொதுப் பணித் துறை அலுவலா்களிடம் விவசாயிகள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, மதகுகளைச் சீரமைக்க கோரி மதகின் மீது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஏறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் ஒன்றியச் செயலா் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு மாவட்டச் செயலா் சாமு. தா்மராஜன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.எஸ். பாலு, நிா்வாகிகள், ஏ.ஜி. பாலன், ஆா். செந்தில்குமாா், க. சுந்தர்ராஜன், ப. சரவணகுமாா், எம். வெங்கடேஷ், கிளை நிா்வாகிகள் ஏ. சகாதேவன், எம். கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com